பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
மாணவர் இணையத்தளத்தை ஹக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, அதனை தனியான இணையப் web portal இல் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளை திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தினை போல தான் தனியான இணையத்தளத்தை அமைத்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவரின் இணையப் web portal ஹக் செய்த பின்னர், அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 5,000 மாணவர்கள் குழுவைக் கொண்ட டெலிகிராம் குழுவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்கள். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சகோதரிகளில் ஒருவர் பல்கலைக்கழகத்திலும், மற்றைய சகோதரி உயர்தர வகுப்பிலும் படித்து வருகின்றனர்.