மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் வரக்கூடும்

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அதன்படி ,இலங்கையில் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது.
அதேவேளை , நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
மேலும் எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் – என்றார்.

Next Post

பிரபல சிங்கள நடிகை Hyacinth Wijeratna உயிரிழந்துள்ளார்.

Sat Jul 31 , 2021
தலவாகலை – லிந்துலை பகுதியில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை Hyacinth Wijeratna உயிரிழந்துள்ளார்.

You May Like