இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்….. Covid -19

நேற்று முன்தினம் (03) மாத்திரம் நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,727 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,536 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,755ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 284,524 போ் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Next Post

கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள்.(Thilakshani Maduwanthi

Thu Aug 5 , 2021
களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது முகப்பு புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். தனது தாயார் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் சேர்க்க நீண்ட வரிசையில் இருந்ததாகவும், வரிசையில் காத்திருந்த போது இருவர் கண்முன்னே இறந்துவிட்டதாகவும், சிலர் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் கூறினார். இந்தியாவைப் பற்றி நான் சொன்ன செய்திகளை இப்போது என் கண்களால் பார்க்கிறேன். இன்று அதிகாலை 1:20 […]

You May Like