இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாளைய தினம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிய முடிகிறது.
கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளதாகவும் அதில் இவ்வாறு கலந்துரையாடப்பட்டதாகவும் அறிமுடிகிறது.
பாராளுமன்றத்தில் இருக்கும் இரண்டு உறுப்பினர்களும் இதனை அறிவிக்குமாறு முடிவெடுக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
சில உறுப்பினர்கள் டலஸ் – சஜித் தரப்புக்கு ஆதரவளிக்குமாறு கூறியதாகவும், இறுதியில் ரணிலுக்கு ஆதரவளிப்பது குறித்தே முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.