ரயில் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளமையால், பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதனால் களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் பல ரயில்கள் இயங்குவதை நிறுத்தியுள்ளன. தமக்கு ஓய்வு அறையை வழங்குமாறு கோரி இன்று பிற்பகல் தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.