மகாலட்சுமி குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிவந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இந்தத் திருமண செய்தி அமைந்திருக்கிறது.
தொகுப்பாளினியாக நம்மிடையே பரிச்சயமானவர் மகாலட்சுமி. பிறகு, சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மகராசி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் தயாரிப்பாளராகவும், யூடியூபராகவும் பரிச்சயப்பட்ட ரவீந்தர் சந்திரசேகருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
மகாலட்சுமி குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிவந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இந்தத் திருமண செய்தி அமைந்திருக்கிறது. பலரும் ஆச்சரியப்பட்டிருக்கும் இந்தத் திருமணம் குறித்து தெரிந்துகொள்ள ரவீந்திரனையே தொடர்பு கொண்டு பேசினோம்.
“திருமண செய்தி உண்மைதான். இன்று காலை இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் திருப்பதி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். பதினைந்து நாள் கழித்து பெரிய அளவில் ரிஷப்சனுக்கு பிளான் பண்ணியிருக்கோம். அந்த திருமண வரவேற்பு நிகழ்வில் எல்லாருக்கும் நிச்சயம் அழைப்பு விடுக்க இருக்கிறோம்!” என்றார்.
இந்தத் திருமணம் குறித்து ரவீந்தர் அவருடைய சமூக வலைதள பக்கங்களில், ‘மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க… ஆனா, அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா… குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!’ எனப் பதிவிட்டிருக்கிறார்.