நிவாரணப் பொதி ஒன்றை 1,998 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையத்தினூடாக விற்பனை

20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 1,998 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையத்தினூடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த பொதி கிடைக்கவுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

1998 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குபவர்களுக்கு குறித்த நிவாரணப் பொதி வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், 2600 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 20 அத்தியாவசியப்பொருட்களே இந்த நிவாரணப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Next Post

எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை..!

Thu Aug 19 , 2021
நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக கனியவள தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில் உள்ளதாகவும் 10 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே இருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -(தமிழன்)

You May Like