பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தகவல் நாளை

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நாளைய தினம் (15) நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

12 முதல் 18 வயது வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் தரம் ஒன்று முதல் 6 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இருவேறு கருத்துக்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளைய தினமே எட்டப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

Next Post

நாடு நெல்லை 55 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு இணங்கப் போவதில்லை..!

Tue Sep 14 , 2021
நாடு நெல்லை இன்று முதல் 55 ரூபாவிற்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணங்கப் போவதில்லை என ரஜரட்ட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பொலனறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஒரு கிலோ கிராம் நாடு நெல்லுக்காக குறைந்தப்பட்சம் 65 ரூபாவேனும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu