தமக்கான வாகன அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குமாறு பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்கள் குழு மீண்டும் இன்று (27) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ள அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் இடைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில் தாம் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக பின்வரிசை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
வாடகை வாகனங்களில் கூட நாடாளுமன்றத்திற்கு வருவதாக சிலர் கூறுகின்றனர்.