கோட்டா தன்னை அச்சுறுத்தியதாக எஸ்.எம்.சந்திரசேன மக்கள் சந்திப்பில் தெரிவிப்பு!

இரசாயன பசளை தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டால் அமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்ரசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டில் உள்ள வைத்தியர்கள் தவறான ஆலோசனைகளை வழங்கினர்.

இராசயன பசளை பயன்பாடு காரணமாக சிறுநீரக நோய் ஏற்படுவதாகவும் இதன்காரணமாக சேதன பசளையை பயன்படுத்துமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினர்.

இது தொடர்பாக தாம் வழங்கிய ஆலோசனைகளை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பசளை தொடர்பில் கருத்து வெளியிட்டால் அமைச்சு பதவியில் இருந்தும் தம்மை நீக்குவதாகவும் அவர் அச்சுறுத்தல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்ரசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

Fri Apr 28 , 2023
வாக்குப்பதிவு தொடர்பாக உள்ளூராட்சி அமைப்புகளால் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் முடிவு ஆவணங்கள் தவிர மற்ற அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், அச்சுப் பணிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் பெறுபேறு ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் உள்ளூராட்சி அதிகாரிகள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu