இன்று (20) இரவு 10.00 மணி முதல் இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
• தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறக்கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
• அத்தியாவசிய மற்றும் ஏற்றுமதிச் சேவைகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை இதோ..!