தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்வு – சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டார்.

நாடாளுமன்றத்தில் அவர் இன்று (புதன்கிழமை) குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.

நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் இலங்கையின் தனியார் துறை ஊழியர்களின் புதிய குறைந்தபட்ச ஓய்வு வயது 60ஆக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது 55 வயது நிரம்பியவர்கள், 57 வயது வரை பணிபுரியலாம் என்றும் 53 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 58 வயது வரையும், 52 வயது நிரம்பியவர்கள் 59 வயது வரையும் பணிபுரியலாம் என்றும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 52 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் புதிதாக பணிக்கமர்த்தப்பட்டவர்கள் புதிய ஓய்வு பெறும் வயதான 60 வயது வரை பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 50 வயதுடைய பெண்களும் 55 வயதுடைய ஆண்களும் தங்கள் விருப்பப்படி ஓய்வு பெறலாம் என்றும் புதிய சட்டமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அவிசாவளை பன்றிக் தோட்டத்தில் பதற்றம் தோட்ட அதிகாரி மக்கள் உட்பட சிலர் வைத்தியசாலையில்

Wed Nov 17 , 2021
அவிசாவளை − பன்றிக் தோட்டத்தில தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது. பன்றிக் தோட்டத்திலுள்ள லயின் குடியிருப்பொன்றிலுள்ள வீடொன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தோட்ட அதிகாரி பலவந்தமாக, குறித்த வீட்டை உடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டின் வயோதிப பெண்ணை, தோட்ட அதிகாரி இதன்போது தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, வயோதிப பெண்ணின் மகன்மார் தோட்ட அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான தோட்ட அதிகாரி மற்றும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu