?ஜப்பான் வேலைகளுக்கான தகுதித் தேர்வு!

இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

 

Nursing Care Worker & Food Service Industry ஆகிய துறைகளுக்காக இந்த தகுதித் தேர்வுகள் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்வு நடத்தப்படும் மற்றும் தேர்வு பலதரப்பட்ட வினாத்தாள் (கணினி அடிப்படையிலான CBT) மூலம் நடத்தப்படும்.

பரீட்சை கட்டணம் பற்றிய தகவல்கள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

பரீட்சை ஜப்பான் மொழியில் இடம்பெறும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுக்கான அழைப்பு மற்றும் தேர்வு மையங்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அந்த பணியகம் அறிவித்துள்ளது.

Next Post

   இந்த அரசாங்கம் மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறது வெளியான தகவல்

Thu Sep 23 , 2021
அதிபர் – ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தெளிவான கலந்துரையாடலுக்கு அரசாங்கம் இன்னும் செவி சாய்க்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகிறது. அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பாக மேலும் கூறுகையில், அதிபர் – ஆசிரியர் சங்கம் இப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் ஒரு படி பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் போராட்டத்தை அரசு நீட்டிக்கவிட்டால், மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி மட்டுமே கிடைக்கும். […]

You May Like