நாட்டின் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை நிறுத்துவதற்கு இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொதுப் போக்குவரத்தின் ஊடாகவும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாத்தியங்கள் இருப்பதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.