ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று (22) காலை 10.00 மணியளவில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கை மற்றும் வரி அனுமதி அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தார்.