கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையால், வைத்தியசாலைகளின் சவச்சாலைகளில், சடலங்களை வைத்திருப்பதற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு தகனசாலைகளை 24 மணிநேரமும் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள சகல தகனசாலைகளையும் இவ்வாறு 24 மணிநேரமும் திறந்து வைப்பத்றகு தீர்மானிக்கப்பட்டுள்ளது என களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்னாயக்க தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சிமன்ற ஆணையாளருக்கும் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்