ரூபவாஹினியில் தற்போது பணியாளர்கள் அதிகமாக உள்ளதாகவும், நிறுவனம் ஒரு பில்லியன் ரூபா கடனாகப் பெற்றுள்ளதாகவும் தற்போது வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால், வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறுவனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.