அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகைதராவிட்டால் சொந்த லீவு என

கல்வி அமைச்சின் செயலாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது ஆசிரியர்களை மெருட்டும் செயற்பாடாகும். இணையவழி வசயில்லாத ஏராளமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடு நடைபெறுகின்றது. அதற்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.

இதுவொரு மாணவர் நலன் சார்ந்த விடயம். அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசியர்கள் மாணவர் இல்லாதவேளையும் பாடசாலையில் இருக்கவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்திருப்பதும் வருகைதராத அதிபர், ஆசிரியர்களுக்கு சொந்த லீவில் கழிக்கப்படும் என்பதும் அதிபர், ஆசிரியர்களை மெருட்டும் செயற்பாடாகவே நாம் பார்க்கிறோம்.

தூர இடங்களில் வதியும் அதிபர் ஆசிரியர்கள் பிள்ளைகள் இல்லாமல் பாடசாலைக்கு ஏன் செல்ல வேண்டும். எத்தனை நாட்களுக்கு இப்படி செல்வது.

கொரோனா அபாயம் ஒரு புறம் செயலாளரின்அச்சுறுத்தல் மறுபுறம்.

எது எப்படியோ ஆசிரியர்கள் தமக்கான லீவினை தமது அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துவதை விடுத்து, கல்வி அமைச்சின் செயலாளர் கட்டாய லீவு வழங்கி பின்னர் பதவி வெறிதாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

Next Post

ஆசிரியர், அதிபர்கள் என கைதான 44 பேருக்கும் தொற்று

Thu Aug 5 , 2021
ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய 44 பேர் கைது செய்யப்பட்டு Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய, அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் இன்று (05) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Like