துறைமுகத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாழ்க்கை செலவு குழு இன்று கூடி விடயங்களை ஆராய்ந்த போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கும், சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கும் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை, சதொச மற்றும் உணவு விநியோகஸ்தர்களின் ஊடாக மக்களுக்கு உடனடியாக விநியோகிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது