சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்

அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ( 25 ஆம் திகதி )ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

COVID தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Post

ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளி

Fri Oct 22 , 2021
ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரி நிறுத்தியதிய போது அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பின்தொடர்ந்து வந்து இடைமறித்து பொதுமகன் இருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இச் சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது..   https://m.facebook.com/story.php?story_fbid=417162543315727&id=110797740618877 https://m.facebook.com/story.php?story_fbid=417162543315727&id=110797740618877

You May Like