ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிறந்த குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பினால் ரஷ்யாவின் உதவியை நாட முடியும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் யூரி மேட்டரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த நிலையில் உள்ள ஒரு நாட்டுக்கு உதவ ரஷ்ய அரசாங்கம் தயங்காது என தூதுவர் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ரஷ்ய தூதுவரை இன்று (21) சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கில் தமது குழுவினர் ரஷ்ய தூதுவரைச் சந்தித்துள்ளனர் என அவர் தெரிவித்தார். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.