உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சரவையில் முன்வைத்தபோதே ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உள்ளிட்டவைகளை உணவாக வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Next Post

19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை சதாசிவம் கலையரசி தெரிவு!

Tue Jun 7 , 2022
கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவி இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கலையரசிக்கு எமது மகிழ்வான வாழ்த்துக்கள். 11வயதில் துடுப்பாட்டத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த கரையரசி கோட்டம் முதல் தேசியம் வரை பல மட்டங்களில் போட்டிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு இளம் வீராங்கனை. கலையரசியின் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டத்தினால் இன்று […]

You May Like