மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்சார சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
மின்சார துண்டிப்பு குறித்து, அமைச்சர் உள்ளிட்ட உரிய உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.