ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக தனி விமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பது குறித்து மாலைதீவு அரசுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.