சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளார். அங்கு சென்றவுடன் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது மனைவி மற்றும் கொழும்பில் இருந்து அவருடன் விமானத்தில் சென்ற இரண்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்கிறார்.
மாலைத்தீவு பாதுகாப்புப் படையின் சிறப்புப் படையினரால் அவர் விமான நிலையம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.