திருத்து வேலைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் சில பிரதேசங்களில் மின்வெட்டு
வடமாகாணத்தில் உயர் அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக, 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணி முதல்,மாலை 17:00 மணிவரை, யாழ் மணி யாழ் மாவட்டத்தின் பின்வரும் பிரதேசங்களில் மின்தடை அமுலாகவுள்ளது.
இதன்படி இணுவில் அண்ணா பண்ணை, அங்கிலிப்பாய் இணுவில், உரும்பிராய், உரும்பிராய் சந்தை, விளாத்தியடி மருதானர்மடம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, கொழும்புத்துறை, மணியந்தோட்டம், பாசையூர், அரியாலை புங்கங்குளம்,உதயபுரம்,செல்வ மஹால் திருமண மண்டபம், கொக்குவில் சந்தி, பூநாறிச் சந்தி, சிவப்பிரகாசம் வீதி மருத்துவ பீட அரங்கம், பொக்ஸ் ரெஸ்ட்(பிறைவேட்) லிமிடெட், மருத்துவ பீடம்,அச்சுக் கூடம் கே.கே.எஸ் வீதி,அன்னங்கைச் சந்தி-கோண்டாவில், இ.போ.ச டிப்போ-கோண்டாவில், ஞானபண்டிதா பாடசாலை கொக்குவில், குமரகோட்டம்-இணுவில், மாவடி, திருநெல்வேலி, நந்தாவில்,பிரம்படி கொக்குவில் மற்றும் சைலோ ஆகிய இடங்களிலும், கிளிநொச்சி பிரதேசத்தில் 682 படைப்பிரிவு இராணுவ முகாம், புதுக்குடியிருப்பு ஹைட்ராமணி, இரணைப்பாலை, கைவேலி (மருத்துவமனை), கோம்பாவில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை, வானவில் மற்றும் திம்பிலி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.