போதைப் பொருள் வர்த்தகர்களை கைது செய்ய காரில் தொங்கி சென்ற காவல்துறை அதிகாரி

இராஜகிரிய − ஒபயசேகரபுர பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதற்காக சென்ற வேளையில், பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

காரில் வருகைத் தந்த போதைப்பொருள் வர்த்தகர்கள், காரில் தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி, காரின் முன்பக்கத்தில் தொங்கிய நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு தொங்கி பொலிஸ் அதிகாரியுடன், சந்தேகநபர் காரை சுமார் ஒரு கிலோமீற்றர் வரை செலுத்தியுள்ளதுடன், அதன்பின்னர் பொலிஸ் அதிகாரி காரிலிருந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Next Post

யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக பதவியை வகித்தார்

Tue Sep 21 , 2021
“மெனிகே மகே இதே” பாடல் மூலமாக பிரபலமான பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.

You May Like