மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை முழுவதும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதிகளிலும் பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் அவதானமாக இருக்கமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம். உதவி கேட்டு, மின்சார தடை தொடர்பில், அல்லது அதிகாரிகள் என கூறி வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களுடன் வெளியே நடமாடுவதனை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வீடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளுங்கள்.

கையடக்க தொலைபேசியின் IMEI இலக்கத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் அவதானமாக இருங்கள்.
உங்களுக்கு பெறுமதியான பரிசு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறி வரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

பேருந்துகளில் புதிய நபர்கள் பழக்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். பேருந்தில் பைகள் வழங்கினால் பெற்றுக் கொள்வதனை தவிர்த்து அவதானமாக இருங்கள்.

நீங்கள் ஏமாற்றப்படலாம். ஏமாற்றுக்காரர்களினால் குறி வைக்கப்படலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்தி- Ada derana

Next Post

உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Tue Jun 7 , 2022
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சரவையில் முன்வைத்தபோதே ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உள்ளிட்டவைகளை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu