திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று பெண் பிள்ளைகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொழும்பு 12 இல் வசிக்கும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் திங்கட்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறி இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கடைசியாக திங்கட்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போன பிள்ளைகளின் குடும்ப உறுப்பினர்களிடமும் பொலிஸார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.