இந்திய பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர், தனது 92வது வயதில் காலமானார்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், மும்பையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவரது உடல் நிலைமை மிக மோசமடைந்து இருந்ததாகவும், அவருக்கு உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.
சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30000திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.
2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது.