எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எண்ணெய் இறக்குமதி நெருக்கடி, நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு மற்றும் கெரவலப்பிட்டி யுகதனவி ஆலையின் ஒரு பகுதி பராமரிப்புக்காக மூடப்பட்டமை மற்றும் களனிதிஸ்ஸ 115 மெகாவோட் எரிவாயு விசையாழி ஆலையில் ஏற்பட்ட பழுதினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தினசரி மின் தேவையில் 40 சதவீதம் நீர் மின்சாரம், 30 சதவீதம் நிலக்கரி, 22 சதவீதம் எண்ணெய் மற்றும் 8 சதவீதம் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மழை இல்லாததால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நீர் மின் நிலையங்கள் எதுவும் செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.