கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அரசாங்கத்துக்கு சொந்தமானJDBE நாகஸ்தென்ன தோட்டத்தில் காணிகளை தனிப்பட்ட முறையில் களவு தனமாக தனியாருக்கு கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக இன்று நாகஸ்தென்ன தோட்ட மக்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இன்று தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து தோட்ட மக்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் “எங்கள் நிலத்தை கம்பெனிக்கு கொடுக்க வேண்டாம்” என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டத்தை தோட்ட காரியாலயத்திற்கு முன்னால் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த பிரதேசத்திலேயே நாங்கள் வாழ்ந்து வருகிறோம் இந்தப் பிரதேசத்தில் இயற்கை காடுகள் இந்த காட்டில் சிறுத்தை, மான், மரை போன்ற காட்டு விலங்குகளும் வாழ்ந்து வருகின்றனர் தனியார் நிறுவனத்திற்கு இப்பிரதேசங்களில் வழங்கப்படுமாயின் இந்த காட்டு விலங்குகள் நகர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
மற்றும் இந்தப் பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றோம் மற்றும் கால்நடைகள் வளர்ககின்றோம் அவைகளுக்கு தேவையான உணவுகளையும் காட்டில் இருந்தே நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம். உங்கள் நிலைதான் என்ன தற்போது அரசு இப்பகுதியினை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதாகவும் எங்களிடம் உள்ள
விவசாய நிலங்களையும் பெற்று தனியார் நிறுவனத்திற்கு வழங்கப் போகின்றர்கள் எனறும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மற்றும் களனி கங்கையின் கிளை ஆறான வீ-ஓயா ஊற்றெடுக்கும் பிரதேசமே இது இவ்வாறு கம்பெனிக்கு வழங்கப்படுமாயின் இந்த ஆற்றிட்க்கும் பாரிய அளவான பிரச்சனை ஏற்படும் எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இவ்வாறு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்படும் நிலங்களை இங்கு வாழும் மக்களுக்கு பிரித்து பாகிருங்கள் நாங்கள் விவசாயம் செய்து எங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்கின்றோம் செலுத்தவேண்டிய அந்தக் குத்தகை பணத்தினை நாங்களே தருகிறோம் எனவும் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்