மாத்தறை – தெய்யந்தரை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் மகனை மரம் வெட்டும் செயின்சோ இயந்திரத்திற்கு தேவையான எரிபொருளை விடுவிக்காத காரணத்தினால் அவரை செயின்சோவினால் வெட்டி காயப்படுத்த முயன்ற விறகு வெட்டுபவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார.
வாகன இறுதி எண் பிரிவில் இல்லாத மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து எரிபொருளை பெற முயன்றபோது, எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
பின்னர் வீட்டிற்கு செயின்சோவை கொண்டு சென்று எரிபொருள் கேட்டுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சந்தேகநபர் தன்னுடன் தகராறு செய்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மகனை செயின்சே இயந்திரத்தால் வெட்ட முயற்சித்துள்ளார்.
அப்போது, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், பொலிஸாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, செயின்சோ இயந்திரத்துடன் அவர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய குறித்தநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.