எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகி ஒருவர் மரணம்

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் நவட்ட பிரதேசத்தில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

நாவலப்பிட்டிய பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று ஓட்டுனரின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது முச்சக்கரவண்டியில் பின்னால் பயணம் செய்த 45 வயது உடைய நாவலப்பிட்டிய பெனிதொடுமுல்ல இலக்கம் 82/A சேர்ந்த “மொஹமட் ஜமால்தீன் முகமட் அஸ்ராம்” என்பவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் கரவநெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்ட பொலிசார் மேற்கொள்கின்றனர் இச் சம்பவம் இன்று அதிகாலை 5.20 மணி அளவில் நடந்திருப்பதாக எட்டியாந்தோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

Next Post

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து சாரதியை மீட்டெடுத்த பொதுமக்கள்

Mon Dec 13 , 2021
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை நகரக்கு அருகில் கனரக வாகனம் ஒன்று பாதையில் மறுப்பக்கம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது வாகனத்தில் பயணித்த சாரதியும் மற்றும் அவருடைய உதவியாளரும் இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது சாரதி வாகணத்தினுள் சிக்குண்டு இருக்கால்களும் சிக்கிய நிலையில் போலீசார் முயற்சியினாலும் பொதுமக்களின் உதவியாலும் சாரதியை மீட்டெடுக்கப்பட்டது இதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

You May Like