தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அந்த தரவு களஞ்சியத்தை நடத்திய செல்ல அனுமதி வழங்கப்பட்ட EPIC Lanka Technologies நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தரிந்து கல்பகே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ராஜித்த சேனாரத்ன, சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியிலேயே, குறித்த நிறுவனத்திற்கு இந்த குத்தகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.