நாட்டில் 18 வயதுக்குக் குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும் பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.