அரச தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய பதவி விலகி இரண்டு நாட்களுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இலங்கைக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.