ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
ஒரே நாடு ,ஒரே சட்டம் என்ற விடயதானத்தினை,ஆராய்ந்து சட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய சிபாரிசுகளை செய்ய இந்த செயலணி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த செயலணியில் முஸ்லிம் உறுப்பினர்கள் நால்வர் சேர்க்கப்பட்ட போதிலும் தமிழர்கள் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதியின் செயலாளர் விசேட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார்.