சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டியொன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேர் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அதேநேரம், மண்டபங்களுக்கு வெளியில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 150 பேர் கலந்துக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளின் போது மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் அதிகபட்சமாக 75 பேருக்கும், விடுதிகளுக்கு வெளியில் 100 பேருக்கும் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் 150க்கும் மேற்படாத எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும் இரவு நேர நடமாட்டத்தடையும் இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.