சாரதி அனுமதிப் பத்திரத்தின் வெளியான புதிய தகவல்

காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் செலுப்படியாகும் கால எல்லையை, மேலும் ஒரு வருடம் வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான கால எல்லைக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான கால எல்லையை, காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நாளை முதல் உற்சவங்கள் திருமண வைபவங்கள் எவ்வாறு நடத்தலாம்

Thu Sep 30 , 2021
நாளை முதல் நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை (01) முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளின் போது […]

You May Like