அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சேவையாளர்களுக்காக எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான போதுமான அளவு பஸ் மற்றும் புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளிடம் சேவை அட்டை, நிறுவன பிரதானியின் கடிதம் என்பன கட்டாயம் இருக்க வேண்டும்.