பிணவறைகளில் இடப்பற்றாக்குறை! அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு
கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்குவந்த வாரத்தில் 194 பேர் வீடுகளில் உயிரிழந்ததாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான ஒருவார காலத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகி 99 பெண்களும் 95 ஆண்களும் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 1,094 பேர் வீடுகளில் உயிரிழந்திருக்கின்றனர்.
மொத்த மரணங்களில் 13.1 வீதம் வீடுகளில் இடம்பெற்றுள்ளன என தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டுகின்றது….