மற்றுமொரு பெற்றோல் மற்றும் கனரக எரிபொருள் எண்ணெய் தாங்கி ஒன்று நேற்று இலங்கை வந்தடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
தர மாதிரி எடுக்கப்பட்டதும் எரிபொருள் இறக்கும் பணி தொடங்கும் என்றார்.
கனரக எரிபொருள் எண்ணெய் மின் உற்பத்திக்கும், தொழிற்சாலை களுக்கு விநியோகம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலக்கத் தகடு கடைசி இலக்க முறைமை மற்றும் எரிபொருள் ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR பரிசோதனை மற்றும் பதிவும் தொடர்வதாகத் தெரிவித்தார்