நாட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயது 18 – திருமணம் மற்றும் விவாகரத்து சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டது.*
மலையக திருமணம் மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலம், நாட்டின் சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நபர்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக மாற்றியுள்ளது.
மலையக திருமணம் மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அங்கீகரிக்கப்பட்டு அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.