எரிபொருள் விநியோகம் தொடங்கும் வரை CEYPETCO எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அங்கு வரிசையில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
தேசிய எரிபொருள் பாஸ் மற்றும் நம்பர் தகட்டின் இறுதி இலக்கம் என இரண்டும் கட்டாயமாக்கப்படும். இது நடைமுறைக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் வாராந்த ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதை சுமூகமாக செயல்படுத்த பொதுமக்கள் ஆதரவு தேவை இது தேவைக்கேற்ப மேம்படுத்தப்படும்.
-அமைச்சர் காஞ்சனா விஜசேகர-
வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் அடிப்படையில்
0, 1, 2 – திங்கள், வியாழன்
3, 4, 5 – செவ்வாய், வெள்ளி
6, 7, 8, 9 – புதன், சனி, ஞாயிறு