எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது ஊழியர்களுக்கு எதிராக தேவையான எந்தவொரு பணிநீக்கம் மற்றும் சட்ட நடவடிக்கைகளையும் பரிசீலிக்க தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் CPSTL க்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன் என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு கொலன்னாவ பெற்றோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிடப்பட்டது.