கொழும்பு கோட்டைக்கும் – காங்கேசன்துறை க்கும் இடையிலான தபால் ரயில் சேவை நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு (19) கொழும்பில் இருந்து ஆரம்பித்த நிலையில் இன்று காங்கேசன்துறையில் இருந்து முதல் சேவை ஆரம்பமானது.
காங்கேசன்துறையில் இருந்து இரவு 18.00 மணிக்கு புறப்பட்ட ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை 18.45 மணிக்கு வந்தடைந்ததுடன் 19.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4.00 மணிக்கு சென்றடையும்.
கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 20.00 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை அதிகாலை 5.29 மணிக்கு வந்தடைவதுடன் காங்கேசன்துறையை அதிகாலை 6.17 இற்கு சென்றடையும்.