மடு திருத்தலத்தின் ஆடித் திருவிழா திருச்சொரூப பவனி இன்று….
கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மடு திருத்தலத்தின் ஆடித் திருவிழா சுகாதார வழிகாட்டலுக்கமைய தொடந்து நவ நாள் திருப்பலிகள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் இன்று காலை திருவிழா திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.
இதன்போது காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில் குருநாகல் மறைமாவட்ட ஆயர் மேதகு ஹரல்ட் அன்டனி ஆண்டகை கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அன்டன் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுக்க உள்ளனர்.
குறிப்பாக கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது. திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெறும்