கல்முனை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை (09) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் மின் தடைப்படும்.

அத்துடன் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (10), சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதி, புளக் கிழக்கு மலையடிக் கிராமம், கல்லரிச்சல் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

எதிர் வரும் திங்கட்கிழமை (13), கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்மன் கோவில், உடையார் வீதி, வி.வி வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத் திட்டம், பாலமுனை, சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனை, தரவைக் கோவில், கடற்கரைப்பள்ளி வீதி ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (14), நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை மற்றும் கோணாவத்தை, உடங்கா, அம்பாறை வீதி, ஹிலால் புரம் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

புதன்கிழமை (15), சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி, வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

வெள்ளிக்கிழமை (17), கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

 

சனிக்கிழமை (18), நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம், அல் அர்சாத் பாடசாலை பகுதி, மாவடிக் கிராமம் ஆகிய பகுதிகளில் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது

Thedal News ?Sri Lanka??

 

 

 

 

Next Post

கர்ப்பமடைவதை தாமதப்படுத்த வைத்திய நிபுணர் கோரிக்கை..!

Wed Sep 8 , 2021
கொரோனா, டெல்டா வைரஸ் திரிபு பரவுவதால் பெண்கள் தாங்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார பிரிவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. டெல்டா திரிபு பரவுவதால், தாய் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹர்ஷா அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu