கொரோனா தடுப்பூசி குப்பிகளில் கலப்படம் உள்ளதாக தெரிவித்து, 16இலட்சம் மடோனா தடுப்பூசிகளை ஜப்பான் நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
560,000 தடுப்பூசிகளை கொண்ட குப்பிகள் அடங்கிய தொகையில், சில வெளிநாட்டு கழிவு பொருட்கள் காணப்பட்டதாக தெரிவித்தே, ஜப்பான் சுகாதார அமைச்சு இந்த தடுப்பூசிகளை நிறுத்தியுள்ளது.
எனினும், தமது தடுப்பூசிகளில் இதுவரை எந்தவித பிரச்சினைகளும் இருக்கவில்லை என மடோனா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி குப்பிகளில் கலப்படம் காணப்படுவதாக கூறப்பட்ட போதிலும், அது எவ்வாறான கலப்படம் என சரியாக கூறப்படவில்லை என தெரியவருகின்றது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.